பொதுவான கேள்விகள்
ALL POSTS
முஸ்லிம்கள் ஏன் அந்நியப் பெண்களோடு கைகுலுக்குவதில்லை?
ஒருவரை சந்திக்கும் போது வாழ்த்து சொல்லும் முறை இடத்திற்கு இடம் மாறுபடும். நாம் மற்றவர்களை சந்திக்கும் போது, நமது மத நம்பிக்கைக்கும், கலாச்சாரத்திற்கும் பொருத்தமான முறையில், வாழ்த்து சொல்லுவோம். முஸ்லிம்களைப் பொறுத்தவரை, அவர்களின் மத நம்பிக்கை அனுமதிக்கின்ற வகையில் வாழ்த்து சொல்கிறார்கள்.
முஸ்லிம்கள் ஏன் ‘பிரசாதம்’ சாப்பிடுவதில்லை?
வெஜிடேரியன்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக அசைவ உணவை சாப்பிடுவதில்லை. அதே போல், முஸ்லிம்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக பிரசாதம் சாப்பிடுவதில்லை. வெஜிடேரியன்களின் விஷயத்தில் நாம் காட்டும் புரிந்துணர்வை, முஸ்லிம்கள் பிரசாதம் சாப்பிட மறுக்கும் விஷயத்திலும் நாம் காட்ட வேண்டும்.
முஸ்லிம்கள் அசைவ உணவு சாப்பிடுவது ஏன்?
“கடவுள் அசைவ உணவை உண்ண அனுமதித்திருக்கிறார்” என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். எனவே, அவர்கள் அசைவ உணவை சாப்பிடுகிறார்கள். எந்த உணவு உண்பது என்பது ஒருவரின் சுய விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்டது. இந்த விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும்.
முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களை நண்பர்களாக எடுத்துக் கொள்ளலாமா?
பெற்றோர்களுக்கு எந்த அளவுக்கு உயர்ந்த தரத்தில் அன்பு செலுத்துவோமோ, அதே போல் முஸ்லிமல்லாதவர்களுக்கும் உயர்ந்த தரத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்று குர்ஆன் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகிறது.