நீங்கள் ஒருவரை வெறுக்கும்போது, மூளை அதை அச்சுறுத்தலாக புரிந்து கொள்கிறது. இதனால் உடல் முழுக்க இரசாயனங்களை அனுப்புகிறது. வெறுப்புணர்வு ஒரு மனிதருக்கு திரும்ப திரும்ப ஏற்படும் பொழுது, இந்த இரசாயனங்கள் அதிகமாக சுரக்கும். இதனால், நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படலாம்.
சிந்தனை மாற்றத்தின் மூலமாக ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த நவீன மனநல மருத்துவர்கள் பயன்படுத்தும் கோக்னிடிவ் தெரபி என்ற சிகிச்சை முறையை குர்ஆன் பயன்படுத்துகிறது. 1400 வருடங்களுக்கு முன்னால் அருளப்பட்ட திருகுர்ஆன் கோக்னிடிவ் தெரபியை கையாள்வது நம்மை பிரமிப்புக்லாக்குகிறது.
சுயநல மிக்க மனிதர்கள் வேகமாக அதிகரித்து வரும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம். பெரும்பாலான மக்கள் தங்களுடைய நலனை பற்றி மட்டுமே சிந்திப்பவர்களாக மாறி, சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றி எந்த விதமான கவலையோ, அக்கறையோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதற்கு என்ன தான் தீர்வு?