மழை, காற்று, சூரியன் போன்ற எல்லா இயற்கை வளங்களையும் நாம் எல்லோரும் பாகுபாடு இல்லமால், சமமாக தான் அனுபவிக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்திருந்தால், ஒவ்வொரு கடவுளும், தன்னுடைய மக்களுக்கு தான் இயற்கை வளங்களை அள்ளித் தர எண்ணுவார். எந்த பாகுபாடையும் நாம் பார்க்காதது, கடவுள் ஒன்றே என்பதை தெளிவாக காட்டுகிறது.