சாக்ரடீஸ்
எங்களைப் பற்றி
சாக்ரடீஸ்
மனித வாழ்க்கை பற்றிய பல கேள்விகளுக்கான விடைகளை தேடி அலையும் மனிதர்களின் அறிவுத் தாகத்தை தணிக்கும் தகவல்களை வழங்கும் தளம் தான் கூரியஸ் ஹாட்ஸ்.
தேடு. படி. சிந்தி – இந்த மூன்று தூண்களின் மேலே கட்டமைக்கப்பட்டுள்ள இணைய தளம் தான் கூரியஸ் ஹாட்ஸ். எல்லோரும் அறிவைத் தேடி, அதை புரிந்து கொண்டு, அதைப் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். அதற்கான ஒரு சிறிய முயற்சியே இந்த இணைய தளம்.
பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட மக்கள் வாழும் நம் நாட்டில், நம்மிடையே கருத்துப் பரிமாற்றம் நடந்தால் தான், புரிதலும், சகிப்புத்தன்மையும் ஏற்படும். நீங்கள் இது வரை அறிந்திராத தகவல்களை உங்களுக்கு தருவது தான் எங்கள் நோக்கம். நாங்கள் தரும் தகவல்களை எல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், விஷயங்களை இப்படியும் பார்க்கலாம் என்று நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.
தமஸோமா ஜோதிர்கமய
என்னை இருளிலிருந்து (பொய்யிலிருந்து) விலக்கி, ஒளியை (சத்தியத்தின்) நோக்கிச் செல்ல அருள்புரிவாயாக!
பொய் என்பது இருள். உண்மை தான் ஒளி. இருளில் நாம் எதையும் பார்க்க முடியாது. இருளில் நாம் யதார்த்தம் என்ன என்பதை அறிய முடியாது. யதார்த்தத்தைப் பார்க்கவும் அனுபவிக்கவும், நமக்கு உண்மை என்கின்ற ஒளி அவசியம். எனவே, உண்மை என்று நாங்கள் கருதும் தகவல்களை உங்களுக்கு தர முயல்கிறோம். அதே நேரத்தில், மற்றவர்களுக்கு மத்தியில் பகைமையை உருவாக்காமல் இருக்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.
க்யூரியஸ் ஹாட்ஸ் மூலம், உண்மையான தகவல்களை உங்களுக்கு வழங்குவதே எங்கள் பணி!

திருகுர்ஆன் அத்தியாயம் 39 வசனம் 9