ஒன்றே மனித குலம்! ஒருவனே இறைவன், அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்! அவன்பாலே நம் மீளுதல், அதன் பிறகே நித்திய வாழ்வு! என்ற மனித வாழ்வின் அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து மக்களை நேர்வழிப்படுத்த அந்த மனிதர்களில் இருந்தே புனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமித்தான் இறைவன்.
அந்த இறைத்தூதர்களை உலகின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் அனுப்பி வந்துள்ளான். இவர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி அவர்கள். அவர்கள் அனைவரும் தத்தமது மக்களை நோக்கி “இறைவன் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு கீழ்ப்படிந்து வாழுங்கள். அவ்வாறு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி காண்பீர்கள். அதற்குப் பரிசாக மறுமையில் சொர்க்கத்தை அவன் வழங்குவான். கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக நடந்தால் இவ்வுலகிலும் அமைதியின்மை காண்பீர்கள். மறுமையில் நரக தண்டனையும் உங்களுக்குக் காத்திருக்கிறது.” என்று போதித்தார்கள்.