கடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத தெளிவான கொள்கை இருந்தால் மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகி இருப்பான்.
மழை, காற்று, சூரியன் போன்ற எல்லா இயற்கை வளங்களையும் நாம் எல்லோரும் பாகுபாடு இல்லமால், சமமாக தான் அனுபவிக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்திருந்தால், ஒவ்வொரு கடவுளும், தன்னுடைய மக்களுக்கு தான் இயற்கை வளங்களை அள்ளித் தர எண்ணுவார். எந்த பாகுபாடையும் நாம் பார்க்காதது, கடவுள் ஒன்றே என்பதை தெளிவாக காட்டுகிறது.
வானத்திலும் பூமியிலும் இறைவனைத் ஒருவனைத் தவிர மற்ற கடவுளர்களும் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும்.
குர்ஆன் 21:22