More

    Choose Your Language

    முஸ்லிம்கள் ஏன் அந்நியப் பெண்களோடு கைகுலுக்குவதில்லை?

    ஒருவரை சந்திக்கும் போது வாழ்த்து சொல்லும் முறை இடத்திற்கு இடம் மாறுபடும். நாம் மற்றவர்களை சந்திக்கும் போது, நமது மத நம்பிக்கைக்கும், கலாச்சாரத்திற்கும் பொருத்தமான முறையில், வாழ்த்து சொல்லுவோம். முஸ்லிம்களைப் பொறுத்தவரை, அவர்களின் மத நம்பிக்கை அனுமதிக்கின்ற வகையில் வாழ்த்து சொல்கிறார்கள்.

    ஆண்களும், பெண்களும் கைகுலுக்குவதால் என்ன கெட்டு விடப் போகிறது?

    இன்றைய காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும்பொழுது கைகுலுக்கி வாழ்த்து சொல்வது சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால் முஸ்லிம்கள் மட்டும் அந்நிய பெண்களோடு ஏன் கைகுலுக்குவதில்லை? என்று கேட்பது நியாயமானதே. இதைப் பற்றி புரிந்து கொள்வோம்.

    முஸ்லிம்கள் அந்நிய பெண்களோடு கைகுலுக்குவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை

    முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்:

    உங்களில் ஒருவர் அன்னியப் பெண்ணைத் தொடுவதை விட, இரும்பு ஆணியால் தலையில் அடிக்கப்படுவது அவருக்கு நல்லது.

    சஹீஹ் ஜாமிஹ் #5045

    இஸ்லாத்தின் படி, ஒரு முஸ்லிம் ஆண் அந்நியப் பெண்ணுடனோ, ஒரு முஸ்லிம் பெண் அந்நிய ஆண்ணுடனோ கைகுலுக்க அனுமதியில்லை.

    குறிப்பு: அந்நிய ஆண், அந்நியப் பெண் என்றால் முஸ்லிமல்லாதாவர்கள் என்று புரிந்து கொள்ளக் கூடாது. முஸ்லிம் ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவரது பிறப்பின் காரணமாகத் திருமண உறவு வைத்துக்கொள்ளத் தடுக்கப்பட்டோரைத் தவிர மற்ற எல்லோருமே இந்த விஷயத்தில் அந்நியராக கருதப்படுவர். உதாரணமாக: ஒரு முஸ்லிம் ஆணுடைய சகோதரனின் மனைவி. சொந்த சகோதரனின் மனைவி தான் என்றாலும், அவரை தொடுவதற்கோ, கைகுலுக்குவதற்கோ அனுமதி இல்லை.

    அந்நிய ஆண்களும், பெண்களும் கைகுலுக்குவதால் என்ன கெட்டு விடப் போகிறது?

    கலாச்சாரம் ஒன்றல்ல

    உலகம் முழுவதும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, கைகுலுக்கித் தான் வாழ்த்து சொல்கிறார்களா? இல்லை. இந்த கட்டுரை பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு கலாச்சார முறையை விவரிக்கிறது.

    கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்லும் முறை

    பல ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும், சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பது வாழ்த்து சொல்கிறார்கள்.

    கட்டிப்பிடித்து வாழ்த்து

    கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொல்லும் முறை

    பிரான்ஸ் போன்ற சில நாடுகளில், சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொல்கிறார்கள். இப்படி வாழ்த்து சொல்லும் முறைக்கு “லா பீஸ்” என்ற பெயருண்டு.

    கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து

    வணக்கம் சொல்லும் முறை

    இந்தியாவில் பல பகுதிகளில், ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் பொழுது, அவர்களை தொடாமல் இரண்டு கைகளையும் சேர்த்து வணக்கம் சொல்லும் பழக்கத்தை நாம் பார்க்கிறோம்.

    சுய விருப்பு வெறுப்புகள்

    ஒருவரை சந்திக்கும் போது எப்படி வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதை அந்த நபர் வாழும் இடமும், கலாச்சாரமும், மத நம்பிக்கையும் தீர்மானிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்களுக்கு கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்வதோ அல்லது கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொல்வதோ மிகவும் சகஜமான ஒரு விஷயம்.

    ஆனால் இந்தியாவில், அந்நிய ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்லும் முறையை அதிகமாக நகரங்களில் மட்டும் தான் நம்மால் காண முடிகிறது. கிராமப் புறங்களில், அந்நிய ஆணும், பெண்ணும் கைகுலுக்குவதை கூட அவர்கள் விரும்புவதில்லை. மேலை நாடுகளில் சகஜமாக மக்கள் பயன்படுத்தும் வாழ்த்து முறைகள், நமக்கு அந்நியமாக தோன்றுகின்றன.

    அமெரிக்கர்களோ, பிரெஞ்சுக்காரர்களோ இந்தியாவிற்கு வருகை தரும் போது, ​​நம் நாட்டின் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களும் அதை புரிந்து கொண்டு நம் நாட்டில் கலாச்சாரத்திற்கு ஏற்புடைய வாழ்த்து முறையை பயன்படுத்துகிறார்கள்.

    மக்களின் உணர்வுகளை மதிப்போம்

    முஸ்லிம்கள் அவர்களின் மத நம்பிக்கையின் காரணமாக, அந்நியப் பெண்ணுடனோ, அந்நிய ஆண்ணுடனோ கைகுலுக்க விரும்புவதில்லை. முஸ்லிம்கள் ஏன் அந்நியப் பெண்களோடு கைகுலுக்குவதில்லை என்பதற்கான காரணம் இப்போது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.

    வாழ்த்து சொல்லும் முறைகள் ஒரு நபரின் சுய விருப்பு வெறுப்புக்குட்பட்டதாக இருப்பதால், நாம் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் விரும்பும் முறையிலேயே வாழ்த்து சொல்ல வேண்டும்.

    கருத்துச் சுருக்கம்

    1. வாழ்த்து கூறும் முறை இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
    2. மேலை நாடுகளில் சகஜமாக மக்கள் பயன்படுத்தும் வாழ்த்து முறைகள், நமக்கு அந்நியமாக தோன்றுகின்றன.
    3. எப்படி வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதை அந்த நபர் வாழும் இடமும், கலாச்சாரமும், மத நம்பிக்கையும் தீர்மானிக்கிறது.
    4. முஸ்லிம்கள் அவர்களின் மத நம்பிக்கையின் காரணமாக, அந்நியப் பெண்ணுடனோ, அந்நிய ஆண்ணுடனோ கைகுலுக்க விரும்புவதில்லை.
    5. வாழ்த்து சொல்லும் முறைகள் ஒரு நபரின் சுய விருப்பு வெறுப்புக்குட்பட்டதாக இருப்பதால், நாம் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் விரும்பும் முறையிலேயே வாழ்த்து சொல்ல வேண்டும்.

    மேலும் படிக்க

    WHAT OTHERS ARE READING

    Most Popular