முஸ்லிம்களின் பிறப்பு எண்ணிக்கையால் இந்தியா முஸ்லீம் நாடாகுமா?

இந்திய முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், அவர்களின் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போவதாகவும், அதனால் இந்தியா ஒரு நாள் முஸ்லிம் நாடாக மாறிவிடும் என்றும் பலர் நினைக்கிறார்கள். உண்மை நிலவரம் என்ன?

இந்திய முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், அவர்களின் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போவதாகவும், அதனால் இந்தியா ஒரு நாள் முஸ்லிம் நாடாக மாறிவிடும் என்றும் பலர் நினைக்கிறார்கள். உண்மை நிலவரம் என்ன?

1. 2011 வருடத்தில் நடத்தப்பட்ட அரசாங்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 2011 வருடத்தில் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி 20 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் குறைந்துள்ளது. 1991 ஆம்  வருடத்தில் 32.8% ஆக இருந்த முஸ்லிம்களின் மக்கள்தொகை வளர்ச்சி, 2011 ல் 24.6% ஆகக் குறைந்துள்ளது.

2. இந்திய முஸ்லீம் பெண்களின் கருவுறுதல் விகிதம் 1991 வருடத்தில் 4.1% ஆக இருந்தது. அது  2011 வருடத்தில் 3.4% ஆகக் குறைந்துள்ளது.

3. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதமும் (10 ஆண்டு வளர்ச்சி விகிதம்) குறைந்து வருகிறது.

199120012011
இந்துக்கள்22.7%19.9% 16.7%
முஸ்லிம்கள்32.8%29.5%24.6%
ஜனத்தொகை பெருக்கம்

குறிப்பு: 1951 முதல் 1961 வரை, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை விட முஸ்லிம் மக்கள்தொகை 11% அதிகமாக இருந்தது. ஆனால், 2001 முதல் 2011 வரை உள்ள முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் வெறும் 7% ஆக குறைந்துள்ளது.

கூடுதல் தகவலுக்கு இந்த லிங்கில் பார்க்கவும்: https://www.thehindu.com/news/national/indias-religious-mix-has-been-stable-since-1951-says-pew-center-study/article36596965.ece 

முஸ்லிம்களின் மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக NFHS தகவல் தெரிவிக்கிறது

2015-16ல் நடத்தப்பட்ட 4வது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்புக்கும் (NFHS) 2019-21ல் நடத்தப்பட்ட  5வது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்புக்கும் இடையே உள்ள காலக்கட்டத்தில், ஒரு பெண்ணின் வாழ்நாளில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை என வரையறுக்கப்பட்ட மொத்த கருவுறுதல் விகிதம், அனைத்து சமூகங்களுக்கும் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்களுக்கான மொத்த கருவுறுதல் விகிதம் 2.62ல் இருந்து 2.36 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

பார்க்க: https://timesofindia.indiatimes.com/india/total-fertility-rate-down-across-all-communities/articleshow/91407169.cms

2050-ல் முஸ்லிம்களின் ஜனத்தொகை 18.4% ஆகவும், இந்துக்களின் ஜனத்தொகை  76.7% ஆகவும் இருக்கும்

இதுவரை உள்ள மக்கள்தொகையின் போக்கைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, 2050 ல், முஸ்லிம்கள் மக்கள்தொகை 18.4% ஆகவும், இந்துக்கள் மக்கள்தொகை 76.7% ஆகவும் இருப்பார்கள் இருக்கும் என்று உலகப் புகழ் பெற்ற PEW ஆராய்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது.

PEW ஆராய்ச்சி ரிப்போர்ட்

பார்க்க: http://www.pewresearch.org/fact-tank/2015/04/21/by-2050-india-to-have-worlds-largest-populations-of-hindus-and-muslims/

மேலே நாம் பார்த்த தகல்வல்கள், முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை தெளிவாக காட்டுகின்றன. எனவே, அடுத்த 300 ஆண்டுகளுக்கு முஸ்லிம்கள் இந்துக்களின் எண்ணிக்கையை முந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை நீங்கள் நன்றாக உணரலாம். 

முஸ்லிம்கள் தங்கள் பிறப்பு விகிதத்தின் மூலம், இந்தியாவை முஸ்லிம் நாடாக ஆக்க முயற்சிக்கிறார்கள்  என்று சொல்வதில் எந்த வித உண்மையும் இல்லை என்பது உங்களுக்கு இப்போது தெளிவாகத் தெரிந்திருக்கும்!

WHAT OTHERS ARE READING

Most Popular