More

    Choose Your Language

    நம் நாட்டில் உள்ள இந்துக்களுக்கு இந்திய முஸ்லிம்கள் அச்சுறுத்தலா?

    இந்திய முஸ்லிம்கள் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் என்றும், அவர்கள் இந்தியாவைக் கைப்பற்ற விரும்புகிறார்கள் என்றும் சிலர் பரப்புகிறார்கள். உண்மை என்ன? முஸ்லிம்களைப் பற்றி உங்களுக்குப் போதித்த அனைத்தையும் ஒரு நிமிடம் ஒதுக்கி வைத்துவிட்டு இது பற்றி சிந்தியுங்கள்.

    இந்திய முஸ்லிம்கள் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் என்றும், அவர்கள் இந்தியாவைக் கைப்பற்ற விரும்புகிறார்கள் என்றும் சிலர் பரப்புகிறார்கள். உண்மை என்ன?

    முஸ்லிம்களைப் பற்றி உங்களுக்குப் போதித்த அனைத்தையும் ஒரு நிமிடம் ஒதுக்கி வைத்துவிட்டு இது பற்றி சிந்தியுங்கள்.

    உங்களைச் சுற்றிலும் ஏராளமான முஸ்லிம்களைப் பார்க்கிறீர்கள். அவர்கள் உங்கள் அண்டை வீட்டார்களாக, நண்பர்களாக, அவர்கள் உங்களோடு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ நண்பர்களாக, உங்களோடு வேலை பார்க்கும் சக ஊழியர்களாக, உங்களுக்கு பொருட்கள் சப்ளை செய்பவர்களாக அல்லது உங்களுடைய வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

    உங்களை அவர்கள் எப்போதாவது பயமுறுத்தினார்களா? நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ, அல்லது பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ உங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டினார்களா? உங்கள் கடையிலிருந்து வாங்குவதையோ அல்லது உங்கள் கடைக்கு சப்ளை செய்வதையோ நிறுத்தினார்களா? நீங்கள் இந்து என்பதால் ஒரு முஸ்லீம் மருத்துவர் உங்களுக்கு சிகிச்சை தர மறுத்தாரா? நீங்கள் இந்து என்பதால் உங்களை எந்த முஸ்லீமாவது தாக்கியிருக்கிறார்களா? உங்களை கோவிலுக்கு செல்ல விடாமல் எந்த முஸ்லீமாவது தடுத்தாரா? எந்த முஸ்லீமாவது உங்களை ஏதாவது ஒரு உணவை சாப்பிடுமாறு வற்புறுத்தினாரா? நீங்கள் விரும்பிய உணவை உண்ணவிடாமல் எந்த முஸ்லீமாவது உங்களைத் தடுத்தாரா?

    மேலே உள்ள எல்லா கேள்விகளுக்கும் உங்களுடைய நேர்மையான பதில் “இல்லை” என்பதாகவே இருக்கும். இதே கேள்விகளை மற்ற இந்து சகோதரர்களிடமும் கேட்டுப்பாருங்கள். அவர்களுடைய பதிலும் “இல்லை” என்பதாகவே இருக்கும்.

    உண்மையில், ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற இந்து சகோதரர்களுக்கு, நண்பராகவோ அல்லது அண்டை வீட்டாரோ அல்லது சக ஊழியராகவோ இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்கிறார்கள். எனவே , அச்சுறுத்தல் பற்றிய கேள்வியே இங்கு எழாது.

    முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், இந்துக்களுக்கோ அல்லது இந்து மதத்திற்கோ எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை. உதாரணம்: முஸ்லீம் நாடான மலேசியாவில் 61.3% முஸ்லிம்களும் 6.3% இந்துக்களும் உள்ளனர்.

    இந்தோனேசியாவில் 87.2% முஸ்லிம்களும் 1.7% இந்துக்களும் உள்ளனர். மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் முஸ்லிம்களும் இந்துக்களும் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்கின்றனர். உலகின் மிக அழகான கோவில்கள் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் தான் காணப்படுகின்றன.

    மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பெரும்பான்மை சமூகமாக வாழும் முஸ்லீம்கள், இந்துக்களுக்கோ இந்து மதத்திற்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை எனும்போது, ​​இந்தியாவில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் (மக்கள் தொகையில் 14.2%) இந்துக்களுக்கு (மக்கள் தொகையில் 80%) அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்று சொல்வது நம்பும்படியாகவா உள்ளது?

    இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று, தோளோடு தோள் நின்று, ஒற்றுமையாக சுதந்திரத்திற்கு பாடுபட்ட நம் முன்னோர்களின் தன்னலமற்ற தியாகத்தால் தான் சாத்தியமானது. “தேசியம்”, “தேசபக்தி” போன்ற உணர்வுகள் இந்துக்களாகவும் மற்றும் இஸ்லாமியர்களாகவும் இருந்த நமது முன்னோர்களை ஒன்றிணைத்தது. அதே உணர்வுகள், இன்று நம்மை ஏன் பிரிக்க வேண்டும்?

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!

    WHAT OTHERS ARE READING

    Most Popular