இந்திய முஸ்லிம்கள் தேசத் துரோகிகளா?

பிரிவினை சக்திகளும், பொய் பிரச்சாரம் செய்பவர்களும், இந்திய முஸ்லிம்கள் தேசத் துரோகிகள் என்று குற்றம் சாட்டுகின்றனர். உண்மை என்ன?

இந்திய முஸ்லிம்கள் தேசத் துரோகிகளா?

முன்னுரை

பிரிவினை சக்திகளும், பொய் பிரச்சாரம் செய்பவர்களும், இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானை அதிகம் நேசிப்பதால், இந்தியா காட்டிக் கொடுக்கும் வேலைகளை செய்யும் தேசத் துரோகிகள் என்று குற்றம் சாட்டுகின்றனர். உண்மை என்ன? வாருங்கள், தெரிந்து கொள்வோம்!

தேசத் துரோகிகளின் பட்டியலைத் தேடி….

நமது எதிரி நாடான பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தின் இரகசியங்களை விற்று, நம் தாய் நாட்டிற்கு துரோகம் செய்துள்ள தேசத் துரோகிகள் யார் என்று தெரிந்து கொள்ள, தேசத் துரோகிகளின் பட்டியலை நாங்கள் திரட்டிய போது, பட்டியலில் உள்ள பெயர்களை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

பாகிஸ்தானுக்கு தகவல்களை விற்ற தேசத் துரோகிகளின் பட்டியல்

இது தான் பாகிஸ்தானுக்கு தகவல்களை விற்ற துரோகிகளின் பட்டியல்.

#NamesOrganizationDateReference
1K V UnnikrishnanRAWSep 1987Reference
2Sibi Mathews
R B Sreekumar
Thampi S Durga Dutt
P S Jayaprakash
S Vijayan
ISROOct 1994Reference
3Rabinder SinghRAWJan 2004Reference
4VishalStudentApr 2007Reference
5Ravi NairRASOct 2007Reference
6Manmohan SharmaRAWMay 2008Reference
7Madhuri GuptaIndian DiplomatApr 2010Reference
8Sukhjinder SinghIndian NavyApr 2010Reference
9Patan Kumar PoddarIndian ArmyAug 2014Reference
10Lalta Prasad
Rakesh Kumar
Raj Kumar Chaubey
Reliance IndustriesFeb 2015Reference
11Santanu Saikia
Shailesh Saxena
Vinay Kumar
KK Naik
Subhash Chandra
Rishi Anand
Journalist /
Reliance Industries
Feb 2015Reference
12Ranjith KKIAFDec 2015Reference
13Satvinder Singh
Dadu
Common CitizenNov 2016Reference
14Arun MarwahaIAFJan 2017Reference
15Dhruv Saxena
Jitender Singh
Balram Singh
Rajeev Tiwari
Sanyog
KP Yadav
Ashish Singh Rathore
Raj Bahadur Singh
BJP IT Cell /
Bajrang Dal
Feb 2017Reference
Reference
16Gulshan Kumar Sain
Shyam Babu
Sivendra Mishra
Common CitizenFeb 2017Reference
17Ravi KumarCommon CitizenMar 2018Reference
18Achyutanand MishraBSFSep 2018Reference
19Nishant AggarwalBrahMos Aerospace Pvt LtdOct 2018Reference
20Somveer SinghIndian ArmyJan 2019Reference
21Balram Singh
Sunil
Shubham
SimBoxAug 2019Reference
22Harpal Singh PalaKhalistaniAug 2019Reference
23Rajeev SharmaJournalistSep 2019Reference
24Vipin SinghCommon CitizenSep 2019Reference
25Mukesh AroraIndian ArmyNov 2019Reference
26Lance Naik Ravi Verma
Vichitra Behera
Indian ArmyNov 2019Reference
27Sunny Kumar
SK Das
S Kumar Sarma
Ashok Kumar
Ashok Kumar
V Kumar
Somanath
Ashok Kumar Singh
Indian NavyDec 2019Reference
28Ramniwas GauraCivil DefenceNov 2020Reference
29Ibrahim Pullatti
Gautham B Vishwanathan
SimBoxJun 2021Reference
30Harpreet Singh
Gurbhej Singh
Indian ArmyJul 2021Reference
31Paramjit Singh
Habibur Rahman
Indian ArmyJul 2021Reference
32Krunal Kumar BariaIndian ArmyOct 2021Reference
33Devendra SharmaIAFMay 2022Reference
34Dukka Mallikarjuna ReddyDRDO HyderabadJun 2022Reference
35Shantimoy RanaIndian ArmyJul 2022Reference
36Abdul Sattar
Nitin Yadav
Ram Singh
Common CitizenJul 2022Reference
37Bhag ChandPakistani Hindu MigrantAug 2022Reference
38Narayan Lal
Kuldeep Singh Shekhawat
Common CitizenAug 2022Reference
39Pradeep KumarIndian ArmySep 2022Reference
40Sher SinghNepali HinduNov 2022Reference
41Deepak Kishor Bhai SalunkheDec 2022Reference
42SumitUnion MinistryJan 2023Reference
43Balaram DeyDRDO OdishaFeb 2023Reference
44Budha Khan
Mehar Ram
Paru Ram
Ratan Khan
IAFMar 2023Reference
45Pradeep KurulkarDRDO PuneMay 2023Reference
46Pathanisamant Lenka
Saroj Kumar Nayak
Soumya Patanaik
Common CitizensMay 2023Reference
47Nikhil ShendeIAFMay 2023Reference
48Vivek Raghuvanshi
Ashish Pathak
Journalist
Ex-Navy Commander
May 2023Reference
49Jyoti MalhotraYouTube VloggerMay 2025Reference
50Moti Ram JatCRPF ASIMay 2025Reference
51Devender SinghStudentMay 2025Reference
52ArmanCommon CitizenMay 2025Reference
53TareefCommon CitizenMay 2025Reference
54Nauman IlahiSecurity GuardMay 2025Reference
55Sukhpreet SinghCommon CitizenMay 2025Reference
56Karanbir SinghCommon CitizenMay 2025Reference
பாகிஸ்தானுக்கு தகவல்களை விற்ற துரோகிகளின் பட்டியல்

மேலே உள்ள தேசத் துரோகிகளின் ட்டியலில் எத்தனை முஸ்லிம் பெயர்கள் உள்ளன? தேசத் துரோகிகளின் பட்டியலில் ஒரு சிலர் மட்டுமே முஸ்லிம்கள். பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள்.

குறிப்பு: இந்த பட்டியலில், பல்ராம் சிங் என்ற தேசத் துரோகி 2017-ம் ஆண்டு உளவு பார்த்ததற்காக முதல்முறையாக கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் உளவு பார்த்ததற்காக, 2019 இல் இரண்டாவது முறையாக பிடிபடுகிறார். பல பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் அப்பாவி முஸ்லிம்களின் நிலையோடு இதை ஒப்பிட்டு பாருங்கள்!

மேலே உள்ள புள்ளிவிவரங்கள் உண்மையை தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இந்த பதிவை படிக்கும் மதிப்பிற்குரிய வாசகரே, பிரிவினை சக்திகளும், பொய் பிரச்சாரம் செய்பவர்களும் புனையும் பொய்களை நீங்கள் இன்னும் நம்புவீர்களா?

இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானை நேசிக்கிறார்களா?

இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானை ஆதரிப்பதில்லை.

பிரிவினையின் போது, மிகப் பெரும்பான்மையான முஸ்லிம்கள், இந்தியாவை தங்களின் சொந்த நாடாகக் கண்டதால், பாகிஸ்தான் செல்வில்லை. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள முஸ்லிம்கள் ஒரே மதத்தை பின்பற்றினாலும், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்தியர்கள், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானியர்கள்.

இந்திய முஸ்லிம்கள் இந்தியாவில் தான் வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள், வாக்களிக்கிறார்கள், வரியும் செலுத்துகிறார்கள். இராணுவம், மருத்துவம், விளையாட்டு, வியாபாரம், கல்வி இப்படி அனைத்துத் துறைகளிலும் இந்திய முஸ்லிம்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றுகிறார்கள்.

எப்படி ஒரு இந்திய கிறிஸ்தவர் இங்கிலாந்தை ஆதரிப்பதில்லையோ, ஒரு இந்திய பௌத்தர் இலங்கையை ஆதரிப்பதில்லையோ, அதே போல் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானை ஆதரிப்பதில்லை.

கிரிக்கெட்டில் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானை ஏன் ஆதரிக்கிறார்கள் என்று சிலர் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ளவும், சுதந்திரப் போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பை அறியவும் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

WHAT OTHERS ARE READING

Most Popular