முன்னுரை
அத்தியாவசியப் பொருட்களைச் சுமந்து செல்லும் கப்பல்களைச் சார்ந்தே நமது அன்றாட வாழ்க்கை இருக்கிறது.
கப்பல்கள் இல்லையென்றால்:
- பெட்ரோல் இல்லை
- எரிவாயு இல்லை
- விநியோகப் பொருட்கள் இல்லை
நம் வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும்.
ஆனால் 3,00,000 டன் எடையுள்ள ஒரு எண்ணெய் கப்பல், கடலில் மூழ்காமல் எப்படி மிதக்கிறது என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?
இறைவன் குர்ஆனில் கூறுகிறான்:
கடலில் மலைகளைப் போல் (மிதந்து) செல்லும் கப்பல்களும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.
குர்ஆன் 42:32
மனிதனால் உருவாக்கப்பட்ட கப்பல்கள் எப்படி இறைவனின் அத்தாட்சியாகும்?
வாருங்கள், இதை புரிந்து கொள்வோம்.
குர்ஆனை தமிழ் மொழியில் நீங்கள் படிக்க விரும்பினால், இங்கே கிளிக் செய்யவும்.
கப்பல்கள் மூழ்காமல் மிதப்பது எப்படி?
கப்பல்கள் இரும்பினால் செய்யப்பட்டிருந்தாலும், அவை கடலில் உள்ள பெருமளவிலான நீரை வெளியே தள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கப்பலின்:
- உட்புறம் காலியாக இருக்கும்
- அகலமாக இருக்கும்
- காற்றால் நிரப்பப்பட்டிருக்கும்
இதனால், கப்பல் கடலில் இறங்கும் போது, பெருமளவிலான நீரை வெளியே தள்ளும். இப்படி கப்பல் நீரை வெளியே தள்ளும் போது, கடலில் உள்ள நீர், கப்பலை பதிலுக்கு மேல்நோக்கித் தள்ளுகிறது. இதனால் தான் கப்பல் மூழ்காமல் மிதக்கிறது.
கடல் நீர் ஒரே மாதிரியாக இருப்பதில்லை
உலகம் முழுவதும் கடல் நீர் ஒரே போல் இருப்பதில்லை. கடல் நீரீன் தன்மையில் மாற்றங்கள் காணப்படுகின்றன.
பல இடங்களில் கடல் நீர்:
- அதிக உப்பாக இருக்கும்
- வெப்பமாக இருக்கும்
- அடர்த்தி குறைவாக இருக்கும்
இவ்வாறு கடல் நீரின் தன்மை மாறுபடும் போது, கப்பல் கடலில் மிதப்பதற்கு தேவையான மேல்நோக்கி தள்ளும் சக்தியும் மாறுபடும்.
கப்பல்களை வடிவமைக்க முடிவது எப்படி?
உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள கடல் நீரின் தன்மை மாறுபட்டாலும், கடல் நீரின் தன்மை எப்போதும் ஒரு நிலையான, நம்மால் கணிக்கக்கூடிய வரம்பிற்குள் தான் இருக்கிறது.
கடல் நீரின் தன்மை ஒருபோதும் திடீரென மாறுவதில்லை.
அதனால்தான் பொறியாளர்களால் துல்லியமாகக் கப்பல்களை வடிவமைக்க முடிகிறது.
கப்பலை வடிவமைக்கும் போது:
- கப்பலின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்
- கப்பல் எவ்வளவு நீரை வெளியே தள்ள வேண்டும்
- கடல் தன்மையில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன
இப்படி அனைத்தும் ஒரு கப்பல் கடலில் இறங்குவதற்கு முன்பே சரியாக கணக்கிடப்பட்டு விடுகின்றன.
கடல் நீரின் தன்மையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால்….
கடல் நீரின் தன்மையில் திடீரென மாற்றம் ஏற்பட்டால் என்னவாகும் என்று சிந்தனை செய்து பாருங்கள்.
- கடல் நீரின் அடர்த்தி திடீரென மாறினால்
- கடலில் உள்ள அழுத்தம் திடீரென மாறினால்
என்ன நடக்கும் தெரியுமா?
- கப்பல்கள் மூழ்கும்
- வர்த்தகம் முடங்கும்
- எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் போகும்
கடல் நீரின் தன்மை சீராக இருப்பதால் தான், கப்பல்கள் கடல் மேல் பயணிக்கின்றன. நமது வாழ்க்கையும் கஷ்டமில்லாமல் ஓடுகிறது.
கப்பல்கள் இறைவனின் அத்தாட்சியா?
மனிதர்கள் உருவாக்கும் கப்பல்கள் எப்படி இறைவனின் அத்தாட்சியாகும் என்று கேட்பது மேலோட்டமாக பார்க்கும் போது சரியாக தோன்றும். சற்று சிந்தித்து பார்த்தால், கப்பல்கள் இயங்குவது இறைவனின் அத்தாட்சியே என்பதை எளிதில் விளங்கி கொள்ளலாம்.
கப்பலை உருவாக்கும் நமது கட்டுப்பாட்டில்:
- கடல் நீரின் தன்மைகள்
- புவிஈர்ப்பு விசை
- கடல் அழுத்த விதிகள்
- இந்த விதிகள் சீராக இயங்கும் தன்மை
போன்றவை இல்லை. நாம் எவ்வளவு திட்டமிட்டு கப்பலை வடிவமைத்தாலும், கடல் நீரின் தன்மை, அழுத்தம், புவியீர்ப்பு விசை ஆகியவை மாறிக்கொண்டே இருந்தால், கப்பல் நிச்சயமாக மூழ்கி விடும்.
கப்பல் மூழ்காமல் மிதப்பதற்குக் காரணம், கடலில் உள்ள நீரின் தன்மை, அழுத்தம், புவியீர்ப்பு விசை ஆகியவை மாறாமல், சீராக இருப்பதுதான்.
திருக்குர்ஆன் இந்த ஆழமான உண்மையை நமக்கு உணர்த்துகிறது.
- சமநிலையோடு சீராக இருக்கும் கடல் நீரின் தன்மைகள்
- மாறாத அழுத்தம்
- நிலையாக செயல்படும் புவிஈர்ப்பு விதிகள்
இப்படி கப்பல் கடலில் பயணிக்க உதவும் இந்த இயற்கை கட்டமைப்பு தான் இறைவனின் அத்தாட்சி.
கப்பல்கள் அவனது கட்டளைப்படி செல்வதற்காகவும், நீங்கள் அவனது அருளைத் தேடவும், அவனுக்கு நன்றி செலுத்திடவும் கடலை இறைவனே உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.
குர்ஆன் 45:12
அறிவியல் தோற்கும் தருணம்
அறிவியல் ஒரு விஷயம் ‘எப்படி’ இயங்குகிறது என்பதை விளக்கி விடும். ஆனால், அந்த விஷயம் ‘ஏன்’ அப்படி இயங்குகிறது என்பதை அறிவியலால் விளக்க முடியாது.
நாம் அதிநவீன தொழில்நுட்பத்தோடு உருவாக்கும்:
- மொபைல்களுக்கு அப்டேட்ஸ் (updates) தேவைப்படுகின்றன
- விமானங்களுக்குப் பராமரிப்பு தேவைப்படுகின்றன
- இயந்திரங்கள் தேய்மானம் அடைந்து, புதிய இயந்திரங்கள் தேவைப்படுகின்றன
ஆனால் கடல் நீரீன் தன்மைகளுக்கோ, அதனுள் இயங்கும் விதிகளுக்கு:
- அப்டேட்ஸ் (updates) தேவையில்லை
- பழுது பார்க்க தேவையில்லை
- இயங்காமல் தோல்வி அடைவதில்லை
இலட்சகணக்கான ஆண்டுகளாக, கடல் நீர் பூமி முழுவதும் துல்லியமான நிலைத்தன்மையுடன், சீராக உள்ளது.
இது தற்செயலாக நடந்திருக்க முடியுமா?
உலகெங்கும் உள்ள பெருங்கடல்களில் நாம் காணும் இந்த நுட்பமான துல்லியம் தற்செயலானது அல்ல.
நாம் வாழும் பூமியில்:
- நுட்பமான ஒழுங்கு
- இயற்கை விதிகளின் நம்பகத்தன்மை
- இயற்கை விதிகளின் நிலைத்தன்மை
இவையெல்லாம் இருப்பதை பகுத்தறிவோடு சிந்திக்கும் எவரும் உணர்ந்து கொள்வர்.
நுட்பமான ஒழுங்கு தோன்ற, அதை உருவாக்கிய ஒருவன் இருக்க வேண்டும்.
சீராக இயங்கும் விதி இருக்கின்றதென்றால், அதை இயற்றிய ஒருவனும் இருக்க வேண்டும்.
இந்த நுட்பமான ஒழுங்கை, மாறாத சீரான விதிகளை இயற்றியவனே எல்லாம் வல்ல இறைவன்.
கடவுள் உண்டா? கடவுளை படைத்தது யார்? பதிலை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
முடிவுரை
மலை போன்ற பெரிய கப்பல் மூழ்காமல் மிதப்பது எப்படி என்பதை ஆழமாக சிந்தித்தால், இறைவன் படைத்த சீரான, சமநிலை தவறாத, மாறாத விதிகள் தான் காரணம் என்பதை உணர்ந்துக் கொள்ளலாம். அதனால், கப்பல்கள் கடல் மேல் பயணிப்பது இறைவனின் அத்தாட்சியே!
அடுத்த முறை நீங்கள் ஒரு கப்பலைப் பார்க்கும்போது… உங்களைப் படைத்த இறைவனை நினைவு கூருங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
கப்பல்கள் கனமாக இருந்தாலும் ஏன் மூழ்குவதில்லை?
கப்பல்கள் உட்புறம் காலியாகவும் அகலமாகவும் இருப்பதால், பெருமளவிலான கடல் நீரை வெளியே தள்ளும். இப்படி கப்பல் நீரை வெளியே தள்ளும் போது, கடலில் உள்ள நீர் கப்பலை பதிலுக்கு மேல்நோக்கித் தள்ளுகிறது. இதனால் தான் கப்பல் மூழ்காமல் மிதக்கிறது.
கடல் நீர் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்குமா?
இல்லை. கடல் நீரீன் தன்மையில் மாற்றங்கள் காணப்படுகின்றன. கடல் நீரின் தன்மை மாறுபட்டாலும், கடல் நீரின் தன்மை எப்போதும் ஒரு நிலையான, நம்மால் கணிக்கக்கூடிய வரம்பிற்குள் தான் இருக்கிறது.
கப்பலை பொறியாளர்கள் எவ்வாறு வடிவமைக்கிறார்கள்?
கப்பலின் எடை, கப்பல் எவ்வளவு நீரை வெளியேற்ற வேண்டும், கடல் தன்மையில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் போன்றவற்றை திட்டமிட்டு கப்பலை வடிவமைக்கிறார்கள்.
கப்பல்கள் எப்படி இறைவனின் அத்தாட்சியாகும்?
கப்பல் மூழ்காமல் மிதப்பது எப்படி என்பதை ஆழமாக சிந்தித்தால், இறைவன் படைத்த சீரான, சமநிலை தவறாத, மாறாத இயற்கை விதிகள் தான் காரணம் என்பதை உணர்ந்துக் கொள்ளலாம். அதனால், கப்பல்கள் கடல் மேல் பயணிப்பது இறைவனின் அத்தாட்சியே!
கப்பல்களை இறைவனின் அத்தாட்சி என்று சொல்லும் குர்ஆன் வசனம் எது?
திருக்குர்ஆன் 42:32 கப்பல்களை இறைவனின் அத்தாட்சி என்று குறிப்பிடுகிறது.
