குர்ஆனில் அல்லாஹ் கூறும் தக்வா உள்ளவர்களின் பண்புகள்

குர்ஆனில் அல்லாஹ் கூறும் தக்வா உள்ளவர்களின் பண்புகளை கண்டறியுங்கள். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து, திருத்திக் கொள்ளுங்கள்.

முன்னுரை

தக்வா என்பதை தொழுகையோடும், நோன்போடு மட்டும் சுருக்கிவிடக் கூடாது. குர்ஆன் எடுத்துக் காட்டும் தக்வா, நம் எண்ணங்கள், செயல்பாடுகள் என நம் வாழ்க்கை முழுவதும் செல்வாக்கு செலுத்துகிறது. நம்முடைய வணக்க வழிபாடுகள், குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம், தனிப்பட்ட மற்றும் பொதுவான நடத்தைகள், இப்படி அனைத்திலும் அது பிரதிபலிக்க வேண்டும்.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடன் எப்படி தக்வாவோடு நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி நடந்துக் கொள்ளுங்கள். மேலும் (அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர இறந்து விடாதீர்கள்.

குர்ஆன் 3:102

இந்தக் கட்டுரையின் முடிவில், உங்களை சுயபரிசோதனை செய்ய உதவும் வகையில் ஒரு சுயபரிசோதனைப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தக்வா உள்ளவர்களின் பண்புகள் என்ன?

தக்வா உடையவர்களின் பண்புகளைப் பற்றி குர்ஆனில் அல்லாஹ் விரிவாக சொல்கிறான். இந்தப் பண்புகளைத் தெரிந்துக் கொண்டால், நம் நிலை என்ன என்பதை நாமே சுயபரிசோதனை செய்து பார்க்கலாம்.

தக்வா உள்ள மனிதரின் பண்புகள் எப்படி இருக்கும் என்பதை விளக்குவதே இந்த வரைபடத்தின் நோக்கம்.

📌படிக்கும் முன்….

‘தக்வா’ என்ற வார்த்தை எல்லா இடங்களிலும் அதே வசனத்தில் இடம்பெறுவதில்லை. பல இடங்களில், அல்லாஹ் ஒரு வசனத்தில் தக்வாவைக் குறிப்பிட்டுவிட்டு, அதற்கு முன்னுள்ள அல்லது பின்னுள்ள வசனங்களில் தக்வா உடையவர்களின் பண்புகளை விவரிக்கிறான்.

உதாரணமாக:

  • அல்குர்ஆன் 6:151–153: இந்த வசனங்களில் முதலில் சில கட்டளைகளை சொல்லிவிட்டு, இறுதியில் அல்லாஹ், “நீங்கள் தக்வா உடையவர்களாக ஆவதற்காகவே (இவற்றை அவன் உங்களுக்கு உபதேசிக்கிறான்)” எனக் கூறுகிறான்.
  • அல்குர்ஆன் 50:31: இதில் தக்வா உடையவர்களுக்குச் சொர்க்கம் வாக்களிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வரும் வசனங்கள் அவர்கள் யார் என்பதை விவரிக்கின்றன.

எனவே, நீங்கள் வசனங்களை படிக்கும் போது, குறிப்பிடப்பட்டுள்ள வசன எண்களுக்கு முன்பு வரும் வசனங்களையும், அதற்க்கு பின்னால் வரும் வசனங்களையும் சேர்த்துப் படிக்க வேண்டும்.

நீங்கள் சுயபரிசோதனையில் ஈடுபடுவதற்கு இலகுவாக இருக்கும் வேண்டும் என்பதற்காக, ‘சுயபரிசோதனை படிவம்’ இக்கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ளது. அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

தக்வா உள்ளவர்களின் பண்புகள் என்ன?
தக்வா உள்ளவர்களும் - ஈமானும், வணக்க வழிபாடுகளும்
தக்வா உள்ளவர்களும் - பாவ மன்னிப்பும்
தக்வா உள்ளவர்களும் - பொறுமையும் நற்பண்புகளும்
தக்வா உள்ளவர்களும் - குடும்பமும், திருமண உறவுகளும்
தக்வா உள்ளவர்களும் - சமூக நடத்தையும்
தக்வா உள்ளவர்களும் - பண விஷயமும்
தக்வா உள்ளவர்களும் -  தர்மமும் ஜகாத்தும்
தக்வா உள்ளவர்களும் - உடன்படிக்கைகளும் வாக்குறுதிகளும்
தக்வா உள்ளவர்களும் -  நீதியும் சமூக பொறுப்பும்
தக்வா உள்ளவர்களும் -  அனாதைகளும், வாரிசுரிமையும்

சுயபரிசோதனை செய்வோம்

தக்வா உள்ள ஒருவரின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று, தங்களைத் தாங்களே அடிக்கடி சுயபரிசோதனை செய்துகொள்வதாகும். அதாவது, தாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, அதை சரிப்படுத்த முயல வேண்டும்.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடன் தக்வாவோடு நடந்துக் கொள்ளுங்கள்! நாளைய தினத்திற்காக (மறுமைக்காக) தான் எதைத் தயார்படுத்தி வைத்துள்ளோம் என்பதை ஒவ்வொருவரும் பார்த்துக் கொள்ளட்டும். அல்லாஹ்வுடன் தக்வாவோடு நடந்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக, நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

குர்ஆன் 59:18

இந்த ஒரே வசனத்தில் “அல்லாஹ்வுடன் தக்வாவோடு நடந்துக் கொள்ளுங்கள்” என்ற கட்டளை இரண்டு முறை வருவதைக் கவனியுங்கள். தக்வாவுடன் வாழ விரும்பும் எவருக்கும், தொடர்ச்சியான சுயபரிசோதனை எவ்வளவு முக்கியம் என்பதை நாம் இதிலிருந்து உணரலாம்.

நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை சுயபரிசோதனை செய்து கண்டறிய, கீழே தரப்பட்டுள்ள படத்தில் கிளிக் செய்து சுயபரிசோதனைப் படிவத்தை டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular