நம் அனைவரும் மறுக்காமல் ஒப்புக் கொள்ளும் ஒன்று தான் மரணம். ஒரு நாள் நாம் இறக்கத்தான் போகிறோம். மரணம் என்றால் என்ன? மரணம் முடிவா? மரணம்தான் முடிவு என்றால், இந்த உலகில் நடக்கும் பல விஷயங்களுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
1) நீதி – இந்த உலகில் முழுமையான நீதி சாத்தியமில்லை
2) நிறைவேறாத கனவுகள் – அகால மரணத்தை சந்திக்கும் புத்திசாலி இளைஞர்களின் நிலை என்ன?
3) அதிர்ஷ்டம் – சிலர் பணக்கார குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். பலர் ஏழை குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். நீதி எங்கே?
மரணம் ஒரு முடிவு என்றால், நீதியின்மை, நிறைவேறாத கனவுகள், அதிர்ஷ்டம் போன்ற பிரச்சினைகளுக்கு எப்படி பதில் கிடைக்கும்? மரணம்தான் முடிவு என்றால் பூமியில் உள்ள வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். பிரபஞ்சத்தின் சீரிய வடிவமைப்பையும் ஒழுங்கையும் பார்க்கும்போது, பிரமாண்டமான இந்த பிரபஞ்சத்தின் படைப்பாளன் அநீதியையும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டான் என்ற அறிவுப்பூர்வமான முடிவுக்கு நாம் வரலாம். ஆனால், மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை சாத்தியமா? நமக்கு மறுபிறவி உண்டா?