ஸூரத்து ஸில்ஸால் விளக்கம்: ஒவ்வொரு செயலுக்கும் விலையுண்டு

ஸூரத்து ஸில்ஸால் விளக்கம் - ஸூராவை புரிந்துக் கொண்டு, அதன்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், மறுமையில் வெற்றி பெறுவது எளிது.

எந்த செயலும் அற்பமில்லை.

ஸூரத்து ஸில்ஸாலிருந்து நாம் படிக்கும் பெரிய பாடம் என்னவென்றால், ஒவ்வொரு செயலும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அல்லாஹ் அதை பதிவு செய்கிறான். நாம் அதை கியாமத் நாளில் பார்ப்போம்.

இந்த ஸூராவின் முக்கியத்துவம்

ஒரு மனிதர் நபி ﷺ அவர்களிடம் வந்து, “நான் வயதானவன், பலவீனமான நினைவாற்றல் உள்ளவன். எனவே எல்லாம் அடங்கிய ஒரு அத்தியாயத்தைக் கற்றுக்கொடுங்கள்.” என்று கேட்டார்.

நபி ﷺ அவர்கள் அவருக்கு சூரா அஸ்ஸில்ஸாலை (சூரா # 99) ஓதிக்காட்டினார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் இதனுடன் எதையும் கூட்டமாட்டேன்” என்று கூறினார்.
அப்போது நபி ﷺ அவர்கள், “இந்த மனிதர் வெற்றி பெற்றுவிட்டார்.” என்று இருமுறை கூறினார்கள்.

முஸ்னத் அஹ்மத் # 6575 (ஹதீஸ் சுருக்கம்)

வெற்றிக்கான ஒரு முழுமையான வழிகாட்டியாக நபி ﷺ அவர்கள் இதைக் கற்பிக்கும் அளவிற்கு, சூரா அஸ்ஸில்ஸாலில் ஏராளமான படிப்பினைகள் பொதிந்துள்ளன.

ஸூரத்து ஸில்ஸால் நமக்கு சொல்லும் செய்தி

அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும்

எவர் ஓர் அணுஅளவு நன்மை செய்தாரோ, அவர் அதைக் காண்பார்.
மேலும், எவர் ஓர் அணுஅளவு தீமை செய்தாரோ, அவர் அதைக் காண்பார்.

குர்ஆன் 99:7–8

மறுமை நாளில் ஒருவர் அல்லாஹ்வுக்கு முன்னால் நின்று, தான் செய்த ஒவ்வொரு செயலையும் காண்பார் என்பதை ஸூரத்து ஸில்ஸால் நினைவூட்டுகிறது.

  • ஒவ்வொரு வார்த்தையும் பதிவு செய்யப்படுகிறது
  • ஒவ்வொரு எண்ணமும் பதிவாகிறது
  • ஒவ்வொரு செயலையும் நாம் கியாமத் நாளில் காண்போம்

இதை ஒருவர் ஆழமாக உணர்ந்தால், அவர் வாழ்க்கையே மாறி விடும். அவரது நடத்தையில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

தனது:

  • பேச்சு
  • தேர்வுகள்
  • மற்றவர்களுடனான நடத்தை
  • தனிப்பட்ட செயல்கள்

இப்படி அனைத்திலும் கவனம் செலுத்தி, விழிப்புணர்வோடு ஒருவர் செயல்படும் போது, அவரது நற்குணங்கள் அதிகரிக்கும், தவறுகள் குறையும். அல்லாஹ்வுடனான உறவு வலுப்படும்.

முஸ்லிம்கள் குர்ஆனிற்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றி அறிந்துக் கொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.

நம் அன்றாட வாழ்க்கையில் ஸூரத்து ஸில்ஸால்

இந்த ஸூரா நாம் நம் அன்றாடச் செயல்களைப் பார்க்கும் விதத்தை மாற்றியமைக்கிறது. இந்த ஸூராவின் கருத்தை நாம் உள்வாங்கினால்:

  • சிறிய நற்செயல்களும் முக்கியம்
  • சிறிய பாவங்களும் ஆபத்தானவை
  • எண்ணங்கள் (நிய்யத்) தூய்மையாக இருப்பது முக்கியம்
  • நற்செயல்களை தொடர்ந்து செய்வது முக்கியம்

என்பதை நாம் உணர்ந்து, நம் செயல்களை குறித்து கவனமாக இருப்போம்.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

எந்த ஒரு நற்செயலையும் அற்பமாகக் கருதாதீர், அது உமது சகோதரரை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே.

ஸஹீஹ் முஸ்லிம் # 2626

சிறிய பாவங்கள் கூட ஆபத்தானவை

நாம் பெரும்பாலும் சிறிய பாவங்களை அலட்சியப்படுத்தி விடுவோம்.

நபி ﷺ அவர்கள் சிறிய பாவங்களைப் பற்றி எச்சரித்துள்ளார்கள்.

சிறிய பாவங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். சிறிய பாவங்களுக்கு ஒரு உதாரணம்: ஒரு பள்ளத்தாக்கில் தங்கியிருக்கும் ஒரு கூட்டத்தைப் போன்றது; அவர்களில் ஒருவர் ஒரு குச்சியைக் கொண்டு வருகிறார், மற்றொருவர் ஒரு குச்சியைக் கொண்டு வருகிறார். அவர்கள் தங்கள் ரொட்டியைச் சமைக்கும் அளவுக்குக் குச்சிகள் சேருகின்றன. நிச்சயமாக, சிறு பாவங்கள் (ஒன்றாகச் சேர்ந்து) ஒருவரைப் பிடித்துக் கொள்ளும்போது, அவை அவரை அழித்துவிடும்.

ஸஹீஹ் தர்கீப் # 2470

சிறு பாவங்களை தொடர்ந்து செய்யும் போது, அவை நம் உள்ளத்தில் ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் நம் ஈமானும், நற்பண்புகளும் பலவீனமடையும்.

ஸூரத்து ஸில்ஸாலை எப்படி நடைமுறைப்படுத்துவது?

அதிகமாக நற்செயல்கள் செய்ய முயலுங்கள். எந்த நற்செயலையும் அற்பமாக எண்ணாதீர். உதாரணமாக:  

  • பயனுள்ள நினைவூட்டல்களைப் பகிர்தல்
  • விளம்பரமில்லாமல் பிறருக்கு உதவுதல்
  • குஷுவோடு தொழுதல்
  • கனிவாகப் பேசுதல்
  • புன்னகைத்தல்

சிறிய பாவங்களை தவிருங்கள். இதெல்லாம் சின்ன விஷயம் தானே என்று சிறிய பாவங்கள் குறித்து அலட்சியமாக இருக்காதீர். உதாரணமாக:

  • கிண்டலான பேச்சுகள்
  • பொய் கலந்த ஜோக் அடித்தல்
  • பொறுப்புகளைப் புறக்கணித்தல்
  • மிகைப்படுத்தி பேசுதல்
  • பிறரை ஏளனமாக நினைத்தல்

வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம்

ஒருவர் ஸூரத்துல் ஸில்ஸாலின் படி வாழ்ந்தால், அவர்:

  • நேர்மையானவர்களாக மாறுவார்
  • மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பார்
  • அதிகமாக பாவமன்னிப்பு தேடுவார்
  • சிறிய நற்செயல்களை அதிகப்படுத்துவார்
  • பொது இடங்களிலும், தனிமையிலும் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்துடன் நடப்பார்

அல்லாஹ்விற்கு எந்த செயலும் சிறியதல்ல என்பதை ஒரு நபர் உணரும்போதுதான் அவரிடம் உண்மையான மாற்றம் தொடங்கும்.

முடிவுரை

ஸூரத்து ஸில்ஸாலை புரிந்துக் கொண்டு, அதன்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், மறுமையில் வெற்றி பெறுவது எளிது.

நன்மை செய்யுங்கள் — அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி.

தீமையைத் தவிருங்கள் — அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும் சரி.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

ஸூரத்துல் ஸில்ஸாலின் முக்கிய செய்தி என்ன?

மறுமையில் நம் செயல்களின் பெறுமானத்தை உணர்த்தி, ஒருவரை செம்மைப்படுத்தவதால், இந்த ஸூரா முக்கியமானது.

ஸூரத்துல் ஸில்ஸால் ஏன் முக்கியமான ஸூரா?

மறுமையில் நம் செயல்களின் பெறுமானத்தை உணர்த்தி, ஒருவரை செம்மைப்படுத்தவதால், இந்த ஸூரா முக்கியமானது.

இஸ்லாத்தில் ஒவ்வொரு செயலுக்கும் கூலி உண்டா?

ஆம். மிகச்சிறிய நன்மை அல்லது தீமைக்கும் கூட கூலி உண்டு.

சிறிய பாவங்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

சிறிய பாவங்கள் ஆபத்தானவை. அவை நம் ஈமானிற்கும், நற்குணத்திற்கும் கேடு விளைவிக்கும்.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular