‘ஈமான் கொண்டவர்களே’ என்று அல்லாஹ் அழைக்கும் போது…

'ஈமான் கொண்டவர்களே' என்று அல்லாஹ் அழைக்கும் போது, அவன் உங்களைத் தான் அழைக்கிறான். வசனத்தை கவனத்தோடு ஓதுங்கள்.

குர்ஆனில் “ஈமான் கொண்டவர்களே!” (நம்பிக்கையாளர்களே!) என்ற வசனத்தை ஓதும் போது…

அப்படியே ஓதிவிட்டு கடந்து விடாமல், சற்று நிறுத்துங்கள்.

அல்லாஹ் நேரடியாக நம்பிக்கையாளர்களை அழைக்கிறான்.

அல்லாஹ் உங்களிடம் பேசுகிறான்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் ‘ஈமான் கொண்டவர்களே!’ என்று அழைப்பதைக் கேட்டால், மிகக் கவனமாகச் செவிசாய்த்துக் கேளுங்கள். ஏனெனில், அந்த அழைப்பிற்குப் பின் அவன் உங்களுக்கு ஒரு நன்மையை ஏவி இருப்பான் அல்லது ஒரு தீமையிலிருந்து உங்களை தடுத்திருப்பான்.

தப்ஸீர் இப்னு கஸீர் 2:104

“ஈமான் கொண்டவர்களே” என்று அல்லாஹ் அழைக்கும் போது….

அல்லாஹ் நம்பிக்கையாளர்களை இதற்கு அழைக்கிறான்:

  • கீழ்ப்படிதல்
  • சிந்தித்தல்
  • செயல்படுதல்
  • பாவங்களைத் தவிர்த்தல்

கட்டளைகள்

ஈமான் கொண்டவர்களே! என்று அழைத்து விட்டு, அவனது கட்டளைகளை அல்லாஹ் கூறுவான்.

ஈமான் கொண்டவர்களே! தொழுகையை நிலைநாட்டுங்கள். (2:43)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். (3:102)

கடுமையாக எச்சரிக்கவும் அல்லாஹ் நம்பிக்கையாளர்களை அழைப்பதுண்டு.

எச்சரிக்கைகள்

ஈமான் கொண்டவர்களே! உங்களில் ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம்… (49:11)

ஈமான் கொண்டவர்களே! வீணான சந்தேகங்களில் பெரும்பாலானவற்றைத் தவிர்த்து விடுங்கள்… (49:12)

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் அல்லாஹ்வின் நினைவை விட்டும் உங்களைத் திசை திருப்பிவிட வேண்டாம். (63:9)

இத்தகைய வசனங்கள் நம்பிக்கையாளனின் நற்பண்புகளை வளர்கின்றன; உள்ளங்களைப் தீமையிலிருந்து பாதுகாக்கின்றன.

அல்லாஹ் நம்மை அழைத்து பேசுவது ஒரு கௌரவம் மட்டுமல்ல, அது ஒரு பெரிய பொறுப்பும் கூட என்பதை நாம் உணர வேண்டும்.

இறைவசனங்களை உணர்வுபூர்வமாக அணுக ஒரு எளிய வழிகாட்டுதல்

இறைவசனங்களை உணர்வுபூர்வமாக அணுக, இதை செய்து பாருங்கள்.

குர்ஆனை ஓதும்போது “ஈமான் கொண்டவர்களே” என்ற வசனம் வந்தால், அந்த இடத்தில் உங்கள் பெயரை சேர்த்து வாசித்து பாருங்கள்.

“ஈமான் கொண்டவர்களே” என்று வரும் இடத்தில் “[உங்கள் பெயரை]…” மனதிற்குள் சொல்லுங்கள்.

உதாரணமாக, “ஈமான் கொண்டவர்களே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!” என்று வரும் வசனத்தில்,

“அப்துல்லாஹ்வே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!” அல்லது “பாத்திமாவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!” என்று உங்கள் பெயரை மனதினுள் சொல்லிக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்யும் போது:

  • அந்த வசனம் நேரடியாக உங்களிடம் பேசுகிறது என்ற எண்ணம் வரும்.
  • அந்தக் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்பட வேண்டும் என்று தோன்றும்.
  • குர்ஆன் ஓதுவது ஒரு உரையாடலாக மாறும்.

நபி (ஸல்) அவர்கள் ஓதும்போது குர்ஆனுக்கு எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

நம்பிக்கையாளர்கள் தரும் பதில்

நம்பிக்கையாளர்களை பற்றி அல்லாஹ் சொல்லும் போது:

அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்வது எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்.

குர்ஆன் 24:51

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு உடனடியாக கீழ்படிவது தான் ஈமானின் அடையாளம்

இந்த வசனங்களை அலட்சியம் செய்யாதீர்

அல்லாஹ் உங்களை “நம்பிக்கையாளர்களே” என்று அழைக்கும் போது:

  • உங்களை நேர்வழியில் செலுத்த அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான்.
  • உங்களால் அவனுக்குக் கீழ்ப்படிய முடியும்.
  • ஈமான் என்பது செயலாக மாற வேண்டும்.

என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆன் உங்களுக்கு ஆதரவாக அல்லது உங்களுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்.

ஸஹீஹ் முஸ்லிம் # 223

ரமலான்: மாற்றத்திற்கான காலம்

ரமலான் என்பது உள்ளங்களை இறைவசனங்களோடு மீண்டும் இணைக்கும் மாதம். அவசர அவசரமாக குர்ஆனை ஓதி முடிப்பதற்குப் பதிலாக:

  • “ஈமான் கொண்டவர்களே” என்ற வசனங்கள் வரும் இடத்தில் நிறுத்துங்கள்.
  • சிந்தியுங்கள்.
  • வசனம் சொல்ல வருவது உங்களுக்கு தான் என்பதை உணருங்கள்.
  • அதன்படி செயல்படுங்கள்.

இதை செய்து வரும் பொது, உங்களுக்குள் ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் உணரலாம்.

முடிவுரை

ஒவ்வொரு முறையும் அல்லாஹ் “ஈமான் கொண்டவர்களே” என்று அழைக்கும் போது, அவன் உங்களைத்தான் அழைக்கிறான்.

வசனத்தை கவனமாக ஓதுங்கள்.

அதில் உங்களுக்கு என்ன செய்தி உள்ளது என்று பாருங்கள்.

உளத்தூய்மையோடு கட்டுப்பட முயலுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

குர்ஆனில் “ஈமான் கொண்டவர்களே” என்பதன் பொருள் என்ன?

இது அல்லாஹ் நேரடியாக நம்பிக்கையாளர்களை அழைத்து கட்டளைகளையும், எச்சரிக்கைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குவதாகும்.

அல்லாஹ் ஏன் வசனங்களை இப்படித் தொடங்குகிறான்?

நம்பிக்கையாளர்களைக் கண்ணியப்படுத்தவும், அவன் சொல்வதை அவர்கள் மிக கவனமாகக் கேட்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு தொடங்குகிறான்.

இந்த வசனங்களில் விலக்கப்பட்ட விஷயங்கள் (தடைகள்) இடம்பெறுமா?

ஆம். கேலி செய்தல், சந்தேகம் கொள்ளுதல், அநீதி இழைத்தல் மற்றும் பாவங்களுக்கு எதிரான பல எச்சரிக்கைகளும், தடைசெய்யப்பட்டவைகளும் இந்த வசனங்களில் இடம் பெறுகின்றன. (உதாரணமாக: ஸூரத்துல் ஹுஜுராத் – 49).

நாம் இந்த வசனங்களுக்கு எப்படிப் பதிலளிக்க வேண்டும்?

சற்று நிறுத்தி, சிந்தித்து, அந்த வசனம் சொல்லும் கட்டளையைப் புரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular