“அல்லாஹ்” என்பது முஸ்லிம்களின் தனிப்பட்ட கடவுள் என்று பலர் நினைக்கிறார்கள். இந்துக்கள் சிவனை எப்படி வழிபடுகிறார்களோ, கிறிஸ்தவர்கள் இயேசுவை எப்படி வழிபடுகிறார்களோ, அதே போல் இஸ்லாமியர்கள் அல்லாஹுவை வணங்குவதாக நினைக்கிறார்கள்.
அல்லாஹ் என்ற வார்த்தைக்கு “கடவுள்” என்று பொருள்
அல்லாஹ் என்பது அரபு வார்த்தையின் அர்த்தம் “கடவுள்”. வெவ்வேறு மொழிகளில் “கடவுள்” என்பதற்கு வெவ்வேறு வார்த்தைகள் உள்ளன. சில உதாரணங்களைப் பார்ப்போம்.
ஹிந்தியில் கடவுளை குறிக்க பயன்படுத்தப்படும் சொல் “ஈஸ்வர்”.
தெலுங்கில் கடவுளை குறிக்க பயன்படுத்தப்படும் சொல் “தேவுடு”.
கன்னடத்தில் கடவுளை குறிக்க பயன்படுத்தப்படும் சொல் “தேவரு”.
மலையாளத்தில் கடவுளை குறிக்க பயன்படுத்தப்படும் சொல் “தெய்வம்”.
அரபு மொழியில் கடவுளை குறிக்க பயன்படுத்தப்படும் சொல் “அல்லாஹ்”.
கூகிள் மொழியாக்கம்
“கடவுள்” என்ற சொல்லை கூகுள் மொழிபெயர்ப்பு “அல்லாஹ்” என்று அரபியில் மொழிப்பெயர்ப்பதை நீங்கள் பார்க்கலாம். இதிலிருந்து “அல்லாஹ்” என்ற அரபு சொல்லின் அர்த்தம் “கடவுள்” என்பதும் முஸ்லிம்களின் பிரத்தியேகக் கடவுளைக் இந்த சொல் குறிக்கவில்லை என்பதும் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

சொற்கள் வேறு விஷயம் ஒன்று
ஹிந்தியில் தண்ணீரை “பாணி” என்றும், கன்னடத்தில் “நீரு” என்றும், தெலுங்கில் “நீலு” என்றும், மலையாளத்தில் “வெல்லம்” என்றும், அரபியில் “மோயா” என்றும் அழைக்கிறோம். வார்த்தைகள் வேறுப்பட்டாலும், அவையெல்லாம் தண்ணீர் என்னும் ஒரு விஷயத்தை தான் குறிக்கின்றன. அதே போல், அல்லாஹ் என்று அழைத்தாலும், கடவுள் என்று அழைத்தாலும், தேவுடு என்று அழைத்தாலும் இந்த சொற்களெல்லாம் நம்மையெல்லாம் படைத்த அந்த கடவுளையே குறிக்கின்றன.
முடிவுரை
முஸ்லீம்கள் “அல்லாஹ்” என்ற வார்த்தையை பயன்படுத்தும் போது, அவர்கள் தங்கள் தனிப்பட்ட கடவுளைக் குறிக்கவில்லை, மாறாக அவர்கள் நம் அனைவரையும் படைத்த கடவுளைத் குறிப்பிடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.