உங்களுடைய கைகளால் உங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள்.
குர்ஆன் 2:195
சிகரெட் அருவருப்பானது! இதோ ஆதாரம்!
யாராவது தங்களுக்குப் பிடித்த உணவை கழிவறையில் சாப்பிட விரும்புவார்களா? தங்களுக்குப் பிடித்த ஜூசை கழிவறையில் குடிப்பார்களா? ஏன், தண்ணீரையாவது குடிப்பார்களா? சிந்தித்து பாருங்கள்.
கழிவறை ஒரு அசுத்தமான இடம். கழிவறையில் சாப்பிடுவது பற்றி நினைத்தாலே அருவருப்பாக இருக்கும். எனவே தான், எந்த ஒரு அறிவுள்ள மனிதனும் கழிவறையில் சாப்பிட மாட்டான்.
கழிவறை போன்ற அசுத்தமான இடத்தில், எந்த வித அருவருப்பும் இல்லாமல் மக்கள் சிகரெட் பிடிப்பதை நாம் காண்கிறோம். அருவருப்பான ஒன்றை தான், அசுத்தமான, அருவருப்பான இடத்தில் நம்மால் பயன்படுத்த முடியும். எனவே, சிகரெட் அருவருப்பானது என்பதற்கு இதை விட பெரிய சான்று வேண்டுமா?
புகைபிடிக்கும்போது உங்கள் நுரையீரலுக்கு என்ன நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்
புகைப்பிடிப்பவர்கள் தங்களையும் கொன்று மற்றவர்களையும் கொல்கிறார்கள்
புகைபிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் (80 லட்சம்) அதிகமான மக்கள் இறக்கின்றனர் என்று WHO (உலக சுகாதார அமைப்பு) மதிப்பிடுகிறது. அதில் 7 மில்லியனுக்கும் (70 லட்சம்) அதிகமானவர்கள் நேரடி புகையிலை பயன்பாட்டினால் இறப்பதாகவும், சுமார் 1.2 மில்லியன் (12 லட்சம்) புகைபிடிக்காதவர்கள் இந்த புகையால் இறப்பதாகவும் WHO (உலக சுகாதார அமைப்பு) கணக்கிடுகிறது.
புகைப்பிடிப்பவர்கள் நமது பூமியையும் கொல்லுகிறார்கள்
நீங்கள் ஏன் தொடர்ந்து புகைபிடிக்க வேண்டும்? இன்றே புகைப்பிடிப்பதை நிறுத்த தீர்மானம் எடுங்கள். அதை நோக்கி செயல்படுங்கள். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.