More

    Choose Your Language

    இஸ்லாம் அரபு மதமா?

    இந்தியாவில் தோன்றியதால் இந்து மதம் "இந்திய" மதம் இல்லையென்றால், இஸ்லாம் மட்டும் ஏன் "அரபு" மாதமாக வேண்டும்? உலகில் சுமார் 180 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். அதில் 80% முஸ்லிம்கள் அரேபியர்கள் அல்ல. இஸ்லாம் ஒரு அரபு மதம் தான் என்று யாராவது சொன்னால், அரபியர்கள் அல்லாத 144 கோடி மக்கள் ஏன் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள்?

    இஸ்லாம் அரபு மதமா?

    இஸ்லாம் ஒரு அரபு மதம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது. முஹம்மது நபி அவர்கள் அரேபியாவில் பிறந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதனாலேயே இஸ்லாம் அரபு மதமாகி விடாது.

    இந்து மதம் இந்திய மதமா?

    வேதங்களும் இந்துத் தத்துவங்களும் இந்தியாவில் இருந்து தோன்றியவை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதனால் இந்து மதம் இந்தியாவுக்கு மட்டும் தான் சொந்தம், வெளிநாட்டவர்களுக்கு இந்து மதம் கிடையாது அப்படின்னு நாம் நினைக்க முடியாது.

    சுவாமி விவேகானந்தரும், சுவாமி பிரபுபாதாவும் இந்து மத சித்தாந்தங்களை வெளிநாடுகளில் போதித்ததிலிருந்து, அவர்கள் இந்து மதத்தை “இந்திய” மதமாக நினைக்கவேயில்லை என்பது நமக்கு தெரிகிறது. இந்தியாவில் தோன்றியதால் இந்து மதம் “இந்திய” மதம் இல்லையென்றால், இஸ்லாம் மட்டும் ஏன் “அரபு” மதமாக வேண்டும்?

    வெளிநாட்டு சீடர்களுடன் சுவாமி பிரபுபாதா

    பௌத்தம்

    புத்தர் இந்தியாவில் பிறந்தார். பௌத்தம் இந்தியாவில் தோன்றியது. ஆனால் உலகில் அதிக எண்ணிக்கையிலான பௌத்தர்கள் இருக்கும் நாடு சீனாதான். கம்போடியா, தாய்லாந்து, இலங்கை, பூட்டான், பர்மா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் பௌத்த நாடுகள்தான். பௌத்தத்தை இந்திய மதமாக பார்த்தால் அவர்களால் பௌத்தத்தைப் பின்பற்ற முடியுமா?

    கம்யூனிசம்

    கார்ல் மார்க்ஸ் எடுத்துச் சொன்ன கம்யூனிசம் ரஷ்யாவில் தோன்றியது. கம்யூனிசத்தை ரஷ்ய சித்தாந்தம் என்றா அழைக்கிறோம்? இல்லையே.

    முஸ்லிம்களின் மக்கள் தொகை

    முஸ்லிம் மக்கள் தொகையில், அரேபியர்கள் வெறும் 20% மட்டுமே என்பது உங்களுக்குத் தெரியுமா? முஸ்லிம் மக்கள் தொகையில் 80% முஸ்லிம்கள் அரேபியர்கள் இல்லை. இந்த புள்ளிவிவரம் மூலம், இஸ்லாம் ஒரு அரபு மதம் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

    குறிப்பு: இஸ்லாமை முஹம்மது நபி அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. “கடவுளுக்கு முழுமையாக கீழ்ப்படிதலை” அடிப்படையாக கொண்ட ஒரு வாழ்க்கை முறை தான் “இஸ்லாம்” என்று அழைக்கப்படுகிறது. இதே வாழ்க்கை முறையைத் தான் முதல் மனிதரான ஆதாமும் பின்பற்றினார் என்று நம்புகிறோம். இதே வாழ்க்கை முறையைத் தான் எல்லா இறைத்தூதர்களும் மக்களுக்கு போதித்தார்கள். இறைத்தூதர்களின் வரிசையில் இறுதியாக வந்த இறைத்தூதர் தான் முஹம்மது நபி அவர்கள். எனவே, முஹம்மது நபி அவர்களும் “கடவுளுக்கு முழுமையாக கீழ்ப்படியும்” இஸ்லாம் என்ற வாழ்க்கை முறையையே போதித்தார்கள்.

    சித்தாந்தம் சொல்வது என்ன என்று பாருங்கள்

    ஒவ்வொரு சித்தாந்தமும் ஏதாவது ஒரு நாட்டில் தான் தோன்றியிருக்க முடியும். அதற்காக அந்த சித்தாந்தம் அந்த நாட்டிற்கு மட்டும் தான் சொந்தம் என்று எண்ணுவது தவறு. அந்த சித்தாந்தம் என்ன சொல்கிறது என்பதையும், அந்த சித்தாந்தம் சொல்வது பகுத்தறிவிற்கு பொருத்தமாக உள்ளதா என்பதை தான் நாம் பார்க்க வேண்டுமே தவிர, அது எந்த நாட்டிலிருந்து தொடங்கியது என்று பார்க்கக் கூடாது.

    கூடுதல் தகவல்களுக்கு:

    ஒரு தெய்வமா? பல தெய்வமா?

    கடவுள்

    வாழ்வின் நோக்கம்


    மேலும் படிக்க

    WHAT OTHERS ARE READING

    Most Popular